×

வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் அந்தரத்தில் தொங்கும் பெயர் பலகைகள்

கூடுவாஞ்சேரி: சென்னை அடுத்த வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை 18 கிமீ தூரம் கொண்டது. இதில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. நல்லம்பாக்கம் மற்றும் வெங்கம்பாக்கம் கூட்ரோட்டில் அடிக்கடி விபத்து ஏற்பட்டது. இதனால், நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கண்ட பகுதிகளில் உள்ள 4 இடங்களில் விபத்து பகுதி என்றும், வளைவு பகுதியில் எந்த ஊர்களுக்கு செல்வது குறித்தும் ராட்சத பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. சரிவர பெயர் பலகை வைக்காததால் சில மாதத்திலேயே உடைந்தும் மடிந்தும் அந்தரத்தில் தொங்குகிறது. பலத்த காற்று வீசும்போது பெயர் பலகைகள் ஆடுகின்றது.

அதிலுள்ள போல்டு, நட்டுகள் கழன்று விழுகின்றன. எந்த நேரத்தில் பெயர் பலகைகள் விழுமோ என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சென்று வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் யாரும் கண்டுகொள்ளவில்லை. எனவே, இந்த பிரச்னையில் உயரதிகாரிகள் தலையிட்டு அந்தரத்தில் தொங்கும் பெயர் பலகையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags : road ,Vandalur-Kelambakkam , Vandalur, Kalambakkam, Name boards
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி