×

இந்தோ-திபெத் எல்லையில் பாதுகாப்பு படையினர் இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிசூடு: 6 பேர் உயிரிழப்பு!

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் உள்ள இந்தோ- திபெத் எல்லையில் பாதுகாப்பு படை வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயணப்பூர் மாவட்டத்தில் இந்தோ-திபெத் பாதுகாப்புப் படை வீரர்களுக்கான 45வது  பட்டாலியன் கேத்னார் முகாம் உள்ளது. இந்த பகுதியில் காலை சரியாக 9 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக, அப்பகுதியின் காவல் ஆய்வாளர் கூறுகைகையில், பாதுகாப்பு படை வீரர்களில் ஒருவர் துப்பாக்கியை எடுத்து தனது சக வீரர்களை சரமாரியாக சுட்டதாக தெரிவித்தார்.

இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதன் பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்திய வீரரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவித்தார். தற்போது காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எதற்காக இந்த மோதல் மற்றும் துப்பாக்கிசூடு சம்பவம் நிகழ்ந்தது என்பதற்கான உண்மை காரணம் இதுவரை தெரியவில்லை. இருப்பினும், தனக்கு விடுமுறை வழங்காத காரணத்தால், விரக்தியில் அந்த வீரர் துப்பாக்கிசூடு நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. துப்பாக்கிசூடு நடந்த இடத்தில் உயரதிகாரிகள் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Tags : security forces ,border ,Tibet ,Indo ,clashes ,Indians , Indo-Tibet frontier, security forces, conflict, gunfire, casualties
× RELATED மணிப்பூரில் 2 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சுட்டுக்கொலை