×

பெருங்கட்டூர் அரசு பள்ளியில் பாதியில் நிறுத்தப்பட்ட ஆடிட்டோரியம் கட்டுமான பணி

செய்யாறு: செய்யாறு அடுத்த பெருங்கட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாதியில் நிறுத்தப்பட்ட ஓஎன்ஜிசி ஆடிட்டோரிய கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா பெருங்கட்டூர் அரசு பெண்கள்  மேல்நிலைப் பள்ளி தென்கழனி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 700 மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் காங்கிரஸ் எம்பி எம்.கே.கிருஷ்ணசாமி முயற்சியால் ஓஎன்ஜிசி (ஆயில் நேட்சுரல் காஸ் கம்பெனி) உதவியுடன் ரூ.25 லட்சத்தில் 4 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் ஆடிட்டோரிய கட்டிடம் கட்டப்பட்டது.

அதன்படி, கட்டிடத்தின் உட்பகுதி மற்றும் முகப்பு வாயிலில் பூச்சு வேலைகள் நடந்தது. பின்னர், சில காரணங்களால் தரைப்பகுதியும், இடது மற்றும் வலது புற சுவர்கள் பூசப்படாமல் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக ஆடிட்டோரியம் கட்டிட பணிகள் முழுமை பெறாமல் உள்ளதை இப்பள்ளியில் பணியாற்றியவர்களிடம் கேட்டதற்கு சரியான பதில் கூறவில்லை. மேலும், நிறைவு பெறாமல் உள்ள கட்டிட பணிகளை சீரமைக்க யாரை அணுகினால் வேலை நடக்கும் என தெரிந்து உரிய நடவடிக்கை எடுக்க முயற்சித்து இருப்போம். ஆடிட்டோரியம் முழுமை பெற்றால் பள்ளி சம்பந்தமான அனைத்து நிகழ்ச்சிகளும், அரசு சார்ந்த நிகழ்ச்சிகளும் ஆடிட்டோரியத்தில் நடத்தலாம். பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகள் இருந்தும் ஆடிட்டோரியம் இல்லாததால், நிகழ்ச்சிகளை மரத்தடியில் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து, நிறுத்தப்பட்டுள்ள ஆடிட்டோரிய கட்டிட பணிகளை முடிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : auditorium ,Government School ,Perungattur Government School , Government School
× RELATED அரசு பள்ளி மாணவர்களின் நோட்டு புத்தகம் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை