×

ஜேஎம்எம் - காங். ஏமாற்று அரசியல்: ஜார்க்கண்டில் மோடி பிரசாரம்

ராஞ்சி:  ‘‘ஜேஎம்எம் - காங்கிரஸ் கூட்டணி, ஏமாற்று அரசியலை பின்பற்றுகிறது,’ என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு 5 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, முதல் கட்டத் தேர்தல் முடிந்து விட்டது. 2ம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரத்தில் கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இம்மாநிலத்தில் உள்ள குந்தியில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜ.வுக்கு ஆதரவாக ேநற்று பிரசாரம் செய்தார். அதில், அவர் பேசியதாவது: ஜார்க்கண்டில் உள்ள மக்கள், பாஜ.வால் மட்டுமே மாநிலத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியும் என்று நம்பிக்கை கொண்டுள்ளனர். மக்களுக்கு சேவை செய்வதில் பாஜ நம்பிக்கை கொண்டுள்ள நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) - காங்கிரஸ் கூட்டணியானது ஏமாற்று அரசியலை பின்பற்றுகின்றன.

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணாமல் பல ஆண்டுகளை காங்கிரஸ் காலம் தாழ்த்தி வந்தது. இதேபோன்று, அயோத்தி பிரச்னையையும் சரியான முறையில் கையாள தவறி விட்டது. அயோத்தி விவகாரம் காங்கிரசால் பற்றி எரிந்துகொண்டிருந்த நிலையில், பாஜ அதற்கான தீர்வை உறுதி செய்துள்ளது. காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது. பழங்குடியினத்தை சேர்ந்த கவர்னர், புதிய யூனியன் பிரதேசத்துக்கு பொறுப்பேற்றுள்ளார். இது நாடு வளர்ச்சியை நோக்கி முன்னேறுவதை குறிக்கிறது என்றார்.

Tags : campaign ,Modi ,Jharkhand JMM ,Congress ,Jharkhand Modi Campaign , J M M - Congress , Jharkhand, Modi c
× RELATED இலவச ரேஷன் பொருட்களை உங்க சொந்த காசுல...