அனைத்து வயது பெண்களையும் சபரிமலையில் அனுமதிக்க உத்தரவிட வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் பிந்து மனு

திருவனந்தபுரம்: சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கேரள அரசிற்கு உத்தரவிடக் கோரி, பிந்து அம்மிணி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த ஆண்டு சபரிமலை சென்று பரபரப்பை ஏற்படுத்தியவர் பிந்து அம்மிணி. கடந்த சில நாட்களுக்கு முன் சபரிமலை செல்வதற்காக திருப்தி தேசாய் கொச்சி வந்தபோது அவரை சந்திக்க சென்ற பிந்து அம்மிணி மீது ஒருவர் மிளகு ஸ்பிரேயை அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது பிந்து அம்மிணி கூறுகையில், இளம் பெண்களை சபரிமலை செல்ல அனுமதிக்க மறுக்கும் போலீஸ் நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வேன் என்று கூறியிருந்தார்.  இந்நிலையில் அவர் போலீஸ் மற்றும் கேரள தலைமை செயலாளருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

அதில், அனைத்து இளம் பெண்களையும் சபரிமலையில் அனுமதிக்க கேரள அரசிற்கு உத்தரவிட வேண்டும். மேலும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனுக்களை முடிவு எடுப்பதற்காக 7 பேர் கொண்ட அமர்விற்கு மாற்றப்பட்டுள்ளது. அப்ேபாது நீதிபதிகள் நாரிமனும் சந்திரசூடும் தெரிவித்த கருத்துக்களை பத்திரிகை, டிவிகளில் விளம்பரம் செய்ய வேண்டும்.  இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Supreme Court ,Bindu , Sabarimalai, Supreme Court, Bindu petition
× RELATED பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி மனு...