×

நேற்றிரவு பெய்த கனமழையால் மேட்டுப்பாளையத்தில் 3 வீடுகள் இடிந்து விழுந்து விபத்து: எண்ணிக்கை 15-ஆக உயர்வு

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்றிரவு பெய்த கனமழையால் 3 வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிந்த நிலையில் 11-ஆக உயர்ந்துள்ளது. நடூர் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் 3 வீடுகள் மீது அருகிலுள்ள கருங்கல் சுவர், இடிந்து விழந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்து வருகின்றன. இந்நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் ஓட்டு வீடு ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இதில் 4 பெண்கள், சிறுமி என 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து அதிகாலை 3.30 மணியளவில் நடைபெற்றுள்ளது. வீட்டில் 12 பேர் இருந்த நிலையில், 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 3 பேரின் நிலைமை இன்னும் தெரியவில்லை என கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

தகவலறிந்து சென்ற வட்டாட்சியர், போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காலை முதலே தொடா்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. 3 வீடுகளில் இருந்த அனைவரசூடு உயிரிழிந்திருக்கலாம் என கருதப்படுகிறது. உயிரிழந்தவர்களில் 10 பெண்கள், 2 குழந்தைகள், 3 ஆண்கள் மேலும் அவர்களின் உறவினர்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. நேற்றிரவு அவர்கள் உறவினர்கள் அங்கு தங்கியதால் பலியின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என கூறப்படுகிறது. இதுவரை 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பாறைகள் அகற்றப்பட்ட பின்பு  மேலும் எதும் உடல்கள் இருக்கிறதா என தெரியவரும் என கூறப்படுகிறது.


Tags : houses , 3 houses,collapsed ,Mettupalaya , heavy rains
× RELATED கொடைக்கானல்: மரம் விழுந்ததில் 2 வீடுகள் சேதம்