×

குற்ற விசாரணைகளை எளிதாக்க 6 தடயவியல் ஆய்வு கூடங்கள் நவீனமயம்: மத்திய உள்துறை திட்டம்

புதுடெல்லி:  நாட்டில் 6 தடயவியல் ஆய்வு கூடங்களை விரைவில்   நவீன வசதிகளுடன் மேம்படுத்துவதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. சண்டிகர், ஐதராபாத், கொல்கத்தா, போபால், புனே மற்றும் கவுகாத்தியில் அமைந்துள்ள மத்திய அரசின் தடய அறிவியல் ஆய்வகங்களை நவீன வசதிகளுடன் மேம்படுத்துவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கடுமையான மற்றும் கொடூரமான குற்றச்சம்பவங்களில் செயல் திறன்மிக்க மற்றும் அறிவியல் ரீதியிலான விசாரணையை எளிதாக்குவதற்கு வழிவகை செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

தடய அறிவியல் சேவை இயக்குனரகத்தின் கீழ் இந்த 6 ஆய்வுகூடங்களின் திறனை மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக டெல்லியில் உள்ள தடய அறிவியல் சேவை இயக்குனரகம், குஜராத் தடய அறிவியல் பல்கலைக் கழகம்,  நடத்தை அறிவியல் நிறுவனம், அகமதாபாத் தடய அறிவியல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.


Tags : Criminal Investigation ,Facilitation ,Laboratories of Modernization , Criminal Investigation, Facilitation, 6 Forensic Studies, Modernization of Laboratories
× RELATED எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றம்