×

எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றம்

பெங்களூரு : கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீதான போக்சோ வழக்கை, குற்றப் புலனாய்வு பிரிவு (சி.ஐ.டி) விசாரணைக்கு மாற்றி அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 17 வயது சிறுமியின் தாயார் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் பிப்ரவரி 2, 2024 அன்று தாயும் மகளும் மோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் முதலமைச்சரின் உதவியை நாடச் சென்றபோது பாலியல் வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

The post எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Yeddyurappa ,Bengaluru ,POCSO ,Karnataka ,Chief Minister ,Criminal Investigation Department ,CIT ,Criminal Investigation ,Dinakaran ,
× RELATED “வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்