×

மகாராஷ்டிரா சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் நானா படோல் தேர்வு பாஜக வேட்பாளர் வேட்பு மனுவை திரும்பப்பெற்றதால் போட்டியின்றி தேர்வு

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் சேர்ந்து மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணியை உருவாக்கி மாநிலத்தில் ஆட்சியமைத்துள்ளன. கடந்த வியாழக்கிழமையன்று தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் நடந்த விழாவில் இந்த கூட்டணி அரசின் முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றுக் கொண்டார். புதிய கூட்டணி அரசின் பெரும்பான்மையை டிசம்பர் 3ம் தேதிக்குள் நிரூபிக்க ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், அரசின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நேற்று சட்டப்பேரவை கூடியது.

அப்போது உத்தவ் தாக்கரே அரசின் மீது நேற்று சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 169 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக வாக்களித்தனர். இந்நிலையில் அம்மாநில சட்டசபை சபாநாயகர் பதவிக்கு விகாஸ் அகாடி கூட்டணி சார்பில் சபாநாயகர் பதவிக்கு காங்கிரசை சேர்ந்த நானா பட்டோலே வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். அவருக்கு எதிராக முர்பாட் தொகுதி எம்.எல்.ஏ. கிஷன் கதோரையை பாஜ களமிறக்கியுள்ளது. சட்டசபையில் பாஜகவின் பலம் குறைவாக உள்ள நிலையில் இன்று காலை கிஷன் கத்தோர்  வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.

இந்நிலையில் சட்டசபை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நானா பட்டோலே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து அவை உறுப்பினர்களை நோக்கி அவர் எழுந்து நின்று வணக்கம் செலுத்தினார்.  அவரை முதல் அமைச்சர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் வழிநடத்தி சென்று சபாநாயகர் இருக்கையில் முறைப்படி அமரவைத்தனர்.

Tags : Speaker ,Congress ,election ,Nana Pathol ,Maharashtra , Maharashtra Speaker, Congress, Nana Pathol
× RELATED மக்களவைத் தேர்தல் பரப்புரை தொடர்பாக...