×

சாமிதோப்பு அருகே ரூ.8.70 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் திறக்கப்படுமா?

தென்தாமரைகுளம்: சாமிதோப்பு அருகே சாஸ்தன்கோவில்விளையில் ரூ.8.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் 3 மாதங்களாகியும் திறக்காமல் உள்ளது. சாஸ்தன்கோவில்விளை, சாமிதோப்பு, கரும்பாட்டூர், செட்டிவிளை, சோட்டப்பணிக்கன்தேரிவிளை, கோட்டையடி, கோட்டையடிபுதூர், ஆண்டிவிளை என்று அனைத்து ஊர்களிலும் அங்கன்வாடி காப்பகங்கள் காணப்பட்டாலும் மிக குறுகிய கட்டடங்கள், குழந்தைகளுக்கான கழிப்பறைகள் என்று போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் சில இடங்களில் காணப்படுகிறது. இதில் சில குழந்தைகள் காப்பகங்களுக்கு தனி கட்டிடம் இல்லாமலும், கழிப்பறை இல்லாமலும், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரமின்றியும் காணப்படுகிறது. சில காப்பகத்தில் போதியகாற்று வசதியின்றி கடுமையான வெப்பம் மற்றும் கடுங்காற்றுக்குள் இருந்து கல்வி பயிலும் சூழ்நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் சாஸ்தான்கோயில்விளையில் சாமிதோப்பு பஞ்சாயத்து அலுவலகம் முன்பு ரூ.8.70 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது.

இந்த கட்டிடத்துக்கான பணிகள் அனைத்தும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முடிந்தது. இருப்பினும் இதுவரையிலும் கட்டிடம் இன்றுவரை திறக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் அவர்கள் சாக்குபோக்குகள் சொல்லிவிட்டு நழுவி விடுவதாக கூறுகின்றனர். எனவே இந்த கட்டிடத்தை உடனே திறக்க வேண்டும். இனியும் காலதாமதம் செய்வது சரியல்ல. ஆகுவே காலம் தாமதம் செய்யாமல் கடடிடத்தை உடனே திறக்க வேண்டும். இனியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மெத்தன போக்கை கடைபிடித்தால் பொது மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடவும்  முடிவு செய்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் சாஸ்தான்கோவில்விளை சென்று இந்த கட்டிடத்தை ஆய்வு செய்து உடனடியாக திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Tags : building ,Anganwadi ,Samitopu ,Samithop , Samithoppu, Anganwadi Building
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்