×

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைக்க மேற்கொண்ட செயல்பாடுகள் வெட்கக்கேடானது : சோனியா காந்தி காட்டம்

டெல்லி : பாஜக ஆட்சியில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி நாடாளுமன்றத்தில் உரக்க வலியுறுத்த வேண்டும் என்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பேசினார். ஜம்மு - காஷ்மீரில் தேசிய தலைவர்களை அனுமதிக்காத பாஜக அரசு, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுமதிக்கிறது என்று குற்றம் சாட்டிய அவர், மகாராஷ்திராவில் பாஜக மேற்கொண்ட செயல்பாடுகள் வெட்கக் கேடானது என்று சோனியா காந்தி காட்டத்துடன் தெரிவித்தார். மேலும் பொதுத் துறை நிறுவனங்களை மோடியின் நண்பர்களுக்கு தருவதா என்றும் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.


Tags : Sonia Gandhi ,BJP ,Maharashtra , Maharashtra, irregularities, BJP rule, Congress, Sonia Gandhi, Jammu and Kashmir
× RELATED மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் சோனியா காந்தி..!!