×

லோக்பால் அமைப்புக்கான சின்னம், பொன்மொழி ரெடி

புதுடெல்லி: மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: லோக்பாலுக்கான சின்னம், பொன்மொழிகள் 6,000க்கும் மேலாக கிடைக்கப் பெற்றன. அவற்றில் இருந்து, அலகாபாத்தை சேர்ந்த பிரசாந்த் மிஸ்‌ரா வடிவமைத்த சின்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நீதிபதிகளின் இருக்கை, 3 மக்களின் உருவம், அசோக சக்கரம், ஆரஞ்சு நிற சட்டப் புத்தகம், தனிப்பட்ட சமநிலையுடன் கூடிய இரண்டு கைகள் ஆகியவை லோக்பால் அமைப்பின் பெயருக்கேற்ப மக்களை பாராமரிப்பவர்’ என்பதை பல்வேறு வகைகளில் குறிக்கின்றது. எனவே, அது சின்னமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. பொன்மொழியில் எதுவும் திருப்தி அளிக்கவில்லை. எனவே, பிறரது சொத்துக்கு ஆசைப்படாதே’ என்ற அர்த்தம் கொண்ட சமஸ்கிருத வாக்கியம் தேர்வாகியுள்ளது என கூறப்பட்டுள்ளது.

Tags : Lokpal Structure, Symbol, Motto, Ready
× RELATED கர்நாடகாவில் நடைபெறும் சட்ட மேலவை...