×

அடையாறு மண்டலத்தில் மின்னணு கழிவு பொருட்களை பெறுவதற்கு பிரத்யேக மையம்

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலம் வார்டு 170 முதல் 182க்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து மின்னணு கழிவுகளை பெறுவதற்கு அனைத்து வார்டுகளிலும் பிரத்யேக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்கள் 30ம் தேதி வரை செயல்படும்.  எனவே, பொதுமக்கள் தங்கள் வீட்டு உபயோகத்திலிருந்து ஒதுக்கப்பட்ட மின்னணு கழிவுப்பொருட்களை மின்னணு கழிவு சேகரிப்பு மையங்களில் ஒப்படைக்கலாம்.

அதாவது உபயோகமற்ற செல்போன்கள், சார்ஜர், டி.வி, கம்ப்யூட்டர், பிரின்டர்ஸ், கீ போர்டு, மவுஸ், இயர் போன், டெலிபோன்ஸ், ரேடியோ, சர்கியூட் போர்ட்ஸ், ஸ்பீக்கர்ஸ், எமர்ஜன்சி சார்ஜர், டிவி ரிமோட், பேட்டரிஸ், பேன்ஸ், ஏர் கண்டிஷனர்ஸ், ஏர் கூலர்ஸ், இன்டக்ஸன் ஸ்டவ்ஸ், ஸ்டெபிளேஸர், இன்வெர்டர்ஸ், மிக்ஸர் கிரைண்டர்ஸ் போன்ற மின்னணு கழிவுப் பொருட்களை மின்னணு கழிவு சேகரிப்பு மையங்களில் வழங்கலாம். இதேபோன்று, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் மின்னணு கழிவு சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு மின்னணு கழிவுப் பொருட்களை சேகரிக்கும் நாட்கள் குறித்து பிறகு அறிவிக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Adyar Zone Adyar Zone , Adyar Zone, Electronic Waste Products, Specialized Cente
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...