×

மாநிலம் முழுவதும் உள்ள போதை மறுவாழ்வு மையங்களின் உள் கட்டமைப்புகளை மேம்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு

சென்னை: மாநிலம் முழுவதும் உள்ள போதை மறுவாழ்வு மையங்களின் உள் கட்டமைப்புகளை மேம்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. டாஸ்மாக் என அழைக்கப்படும் தமிழ்நாடு மாநில மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட், மாநிலம் முழுவதும் உள்ள போதை  மறுவாழ்வு  மையங்களின் உள் கட்டமைப்பைச் மேம்படுத்த முடிவு செய்து உள்ளது. இதற்காக ரூ.3.65 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஒதுக்கப்பட்ட பணம் கட்டில்கள், உபகரணங்கள் வாங்குவதற்கும் புதிய வார்டுகளை நிர்மாணிப்பதற்கும் பயன்படுத்தப்படும் என கூறினார். தமிழ்நாட்டில், போதை மறுவாழ்வு மையங்கள் பொதுவாக அரசு மருத்துவமனைகளுக்குள் ஒரு வார்டில் அமைந்துள்ளன என கூறினார்.

மனநல மருத்துவர்கள் மற்றும் மருந்தாளுநர்களை போன்ற பணியாளர்களை வலுப்படுத்துவதையும் நாங்கள் பார்க்கிறோம் என டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அங்கு வரும் மக்கள் ஊட்டச்சத்து மற்றும் மருந்துகள் பெறுவதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம் என்று அந்த அதிகாரி கூறினார். இது தொடர்பான அரசாங்க உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். தமிழ்நாட்டில் மதுபான சந்தையை கண்காணிக்கும் ஆய்வாளர்கள், டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் தினமும் சுமார் 70 லட்சம் பேர் மது அருந்துகிறார்கள் என்று மதிப்பிடுகின்றனர். எனவே மாநிலத்தில் 5,152 மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் 1,872 பார்கள் உள்ளன என ஆய்வில் தகவல் வந்துள்ளதாக கூறினார். மேலும் 2018-19 ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் அரசாங்கம் ரூ.31,157 கோடி வருமானத்தை ஈட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : drug rehabilitation centers ,task force ,state , task force's,decision,improve ,structures,drug rehabilitation centers,state
× RELATED மராட்டிய மாநிலம் தானேவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!!