×

பாஜ அரசின் பொருளாதார மந்தநிலையை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேச்சு

சென்னை:பாஜ அரசின் பொருளாதார மந்தநிலையை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். தமிழக காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர்கள் கே.வி.தாமஸ், சஞ்சய் தத், ஸ்ரீவெல்ல பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மூத்த தலைவர்கள் கே.வி.தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், மாநில பொருளாளர் நாசே ராமசந்திரன், எம்பிக்கள் ஜெயக்குமார், விஷ்ணுபிரசாத், எம்எல்ஏக்கள் விஜயதாரணி, ராஜேஷ், நிர்வாகிகள் கோபண்ணா, வக்கீல் செல்வம், சீரஞ்சிவி, ஹசன் ஆருண், ஊர்வசி அமிர்தராஜ், பொன்.கிருஷ்ணமூர்த்தி, தாமோதரன், கீழானூர் ராஜேந்திரன், எஸ்.கே.நவாஸ், நாஞ்சில் பிரசாத், ரங்கபாஷ்யம், இரா.மனோகர், டில்லி பாபு, சுமதி அன்பரசு, ஆலங்குளம் காமராஜ், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகர், அரும்பாக்கம் க.வீரபாண்டியன், ரூபி மனோகரன் மற்றும் எம்.பி.ரஞ்சன்குமார், மயிலை தரணி, திருவான்மியூர் மனோகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசியதாவது: பாஜ ஆட்சி தமிழகத்தில் இருந்தால் கூட செய்ய முடியாத காரியத்தை எல்லாம் எடப்பாடி செய்கிறார். எப்படி அதிமுகவுக்கு திராவிட இயக்கம் என்ற பெயர் பொருந்தும் என்பதை நீங்கள் யோசித்து பார்க்க வேண்டும். இன்றைக்கு புதிய கல்வி கொள்கையை கொண்டு வந்திருக்கிறார்கள். இனிமேல் தமிழகத்தில் படிக்கும் மாணவர்கள் 5, 8, 10, 11, 12ம் வகுப்புகளில் பொது தேர்வு எழுத வேண்டும். இது எல்லாம் முடிந்த பிறகு நீட் என்னும் ஒரு பொது தேர்வை எழுத வேண்டும். இத்தனை தேர்வு எழுதி வெற்றி பெற்றால் தான் அவன் 12ம் வகுப்பு படித்தவன் என்ற அங்கீகாரமோ, அதன் பிறகு ஒரு நிறுவனத்தில் அதாவது, அரசாங்கத்தில் பணியாற்றும் தகுதி கிடைக்கும் என்றும் வெளியிட்டுள்ளார்கள்.

இதனை ஆர்எஸ்எஸ்காரர்கள் ஏற்று கொண்டிருக்கிறார்கள். அதனை பாஜ அரசும் ஏற்று கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் எடப்பாடி அரசாங்கம் அதை அமல்படுத்துகிறது. இதை செய்ய என்ன உரிமை இருக்கிறது. சமூக நீதி என்பது நாம் போராடி பெற்றது. ஆர்எஸ்எஸ் சொன்னது என்பதற்காக இத்தனை தேர்வு முறைகளை தமிழகத்தில் கொண்டு வந்திக்கிறார்கள். அதற்கு புதிய கல்வி கொள்கை என்று பெயர் வைத்திருக்கிறார்கள். நாம் மோசமான காலகட்டத்தில் இருக்கிறோம். ஜனநாயகம் அழிக்கப்படுகிறது. நாம் போராடி பெற்ற சமூக நீதி ஒழிக்கப்படுகிறது. இந்த நாட்டில் மீண்டும் வேறுபாடு உள்ள சமூகம் வேண்டும் என்பதற்காக ஆர்எஸ்எஸ் போராடி கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.



Tags : protests ,Chennai ,government ,Congress ,recession ,Bajaj ,KS Alagiri The BJP ,KS Alagiri ,downturn , Baja Government, Economic Depression, Congress, KS Alagiri
× RELATED அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன...