×

மத்திய பிரதேசத்தில் வினோதம்: 2 தலைகள், 3 கைகளுடன் பிறந்த ஆண் குழந்தை

மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் 2 தலைகள், 3 கைகளுடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாபிதா(21). இவருக்கும் அஹிர்வார் என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு இன்று மாவட்ட மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை அன்று ஆண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்கு இரண்டு தலைகளும் 3 கைகளும் இருந்தது.

இதுகுறித்து அந்த மருத்துவமனை மருத்துவர்கள் கூறும்போது, இந்த குழந்தைக்கு 2 தலைகள் மற்றும் 3 கைகள் உள்ளன. எனினும் ஒரு இதயம் மட்டுமே உள்ளது. இந்தக் குழந்தைகள் தற்போது கண்காணிப்பிற்காக தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்தக் குழந்தையின் தாயும் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது போன்று ஒரு குழந்தை பிறந்திருப்பது மிகவும் அரிது எனத் தெரிவித்துள்ளனர். 2 தலைகளோடு ஒட்டிப் பிறந்த அக்குழந்தை 3.3 கிலோ எடையுடன் இருந்தது. அதேபோல மூன்று கைகளும் நான்கு பாதங்களும் இருந்தன.

Tags : baby boy ,Madhya Pradesh , Madhya Pradesh, Strange, Male Child
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?