×

டிரைவர், கண்டக்டர்களின் ஐடி கார்டு ஜெராக்ஸ் வைத்து பஸ்சில் ஓசி பயணம்: தீவிரமாக கண்காணிக்க ஊழியர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவு

சென்னை: ஓட்டுனர், நடத்துனர்களின் அடையாள அட்டையின் நகலை  ஆசாமிகள் சிலர் பயன்படுத்தி அரசு பஸ்களில் ஓசியில் பயணித்து வருகின்றனர்.சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகம் (எம்டிசி) சார்பில், தினசரி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதை தினசரி லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இம்மாநகர் போக்குவரத்து  கழகத்தின் சார்பில் பயணிகளுக்கு பல்ேவறு விதமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு இலவச பாஸ் வழங்கப்பட்டுள்ளது. அரசு அங்கீகாரம் ெபற்ற தனியார் கல்லூரி, தொழில்நுட்ப பயிலகங்கள், பொறியில் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 50 சதவீத பயணக்  கட்டணச்சலுகை வழங்கப்படுகிறது.இதேபோல் ஏராளமான சலுகைகள் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக போலி ஆசாமிகள், அரசு பஸ்களில் முறைகேடாக ஆவணங்களை தயாரித்து இலவச பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்ஒருபகுதியாக அரசு  பஸ்களில் பணியாற்றும் ஓட்டுனர், நடத்துனரின் அடையாள அட்டை நகலைக்கொண்டு பலர் இலவசமாக பயணித்து வருகின்றனர். இதனால் நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதையடுத்து அனைத்து கிளை மேலாளர்களுக்கும் எம்டிசி சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘மாநகர் போக்குவரத்துக்கழகம் ஓர் பொதுச்சேவை நிறுவனமாகும்.  இக்கழகத்தில் அரசாணையின்படி பல்வேறு வகையான இலவச அனுமதி சீட்டு மற்றும் பயணக்கட்டண சலுகை அட்டை போன்றவை பெது மக்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கிறது.

மாநகர் போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களில் பெரும்பாலும் குறிப்பாக ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப மற்றும் அலுவலக பணியாளர்கள் தங்களது அசல் பணி அடையாள அட்டையை நகல் எடுத்து பேருந்து பயணத்தின்  போது பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு நகல் எடுக்க கடைகளில் கொடுக்கும் பொழுது அதனை கடைக்காரர் அதிக படியாக நகல் எடுத்து, அதனை முறைகேடாக பொதுமக்களிடம் விநியோகம் செய்து பலர் பயன்படுத்த வாய்ப்புள்ளது.  ஏற்கனவே நமது பேருந்துகளில் காவல்துறை மற்றும் பிற அரசு துறையை சார்ந்த பணியாளர்கள் தங்களது அடையாள அட்டையை இலவச பாஸ் என கூறி பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்கின்றனர். இதன்காரணமாக வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், உண்மையான பணியாளர்கள் யார் என்பது தெரியாமல் போகின்றது. நகல் அட்டையை பயன்படுத்தி பேருந்துகளில் பயணம் செய்யும் போலி ஆசாமிகளை கண்டறிந்து அவர்கள் பயன்படுத்திய  போலி அடையாள அட்டையை பறிமுதல் செய்திடவும், நிர்வாகத்திற்கு வருவாயை உயர்த்திடவும், வரும் காலங்களில் பணி மற்றும் பயணத்தின் போது அசல் பணி அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.

அனைத்து கிளைமேலாளர்களும் இச்சுற்றறிக்கை குறித்து ஓட்டுனர், நடத்துனர் மற்றும் தொழில்நுட்ப மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு நன்கு விளக்கிக்கூறியும், அவர்களிடம் கையோப்பம் பெற்று எதிர்காலத்தில் புகார் ஏதும் எழா வண்ணம்  கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என கூறப்பட்டுள்ளது. காவல்துறை மற்றும் பிற அரசு துறையை சார்ந்த பணியாளர்கள் தங்களது அடையாள அட்டையை இலவச பாஸ் என கூறி பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்கின்றனர்.  இதன்காரணமாக வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், உண்மையான பணியாளர்கள் யார் என்பது தெரியாமல் போகின்றது.



Tags : Xerox ,Transport department ,OC , Driver, conductor, ID card , bus ,xerox
× RELATED தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு...