×

‘நாம்தான் முட்டாள்கள்’: வெளுத்து கட்டிய பத்திரிகைகள்

மகாராஷ்டிரா விவகாரம் நேற்று நாடு முழுவதும் அனைத்து செய்தி தாள்களின் முதல் பக்கத்திலும், இதுதான் முதன்மை செய்தியாக வெளியானது. ஆனால், வெள்ளி இரவு முதல் பல அதிரடி மாற்றங்கள் ரகசியமாக நடந்தன. டெல்லி மாநாட்டுக்கு வரவேண்டிய மகாராஷ்டிரா ஆளுநர் தனது பயணத்தை ரத்து செய்தார். பிரதமர் அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்காமல், தனக்குரிய சிறப்பதிகாரத்தை பயன்படுத்தி ஜனாதிபதி ஆட்சி ரத்து பரிந்துரைக்கு அனுமதி அளித்தார். அதிகாலை 5.30 மணிக்கு பட்நவிஸ், அஜித் பவார் ராஜ்பவன் வந்தனர். 5.47 மணிக்கு ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்பட்டது. 7.50 மணிக்கு பட்நவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர். இச்சம்பவம் அன்றைய பத்திரிக்கைகளின் முதன்மை செய்தியை பொய்யாக்கின. பாஜ.வின் இந்த தடாலடி நடவடிக்கையை ஆங்கில பத்திரிக்கைகள் நேற்று தங்களுக்குரிய பாணியில் வித்தியாசமான தலைப்பு கொடுத்து கடுமையாக விமர்சித்துள்ளன.

‘டெலிகிராப்’ என்ற பத்திரிக்கை ‘we the idiots’ (நாம் முட்டாள்கள்) என்ற தலைப்பில் இந்த செய்தியை முதன்மை செய்தியாக வெளியிட்டது. பிரதமர் சிறப்பு சட்டத்தை பயன்படுத்தும் போது, ஜனாதிபதி ரப்பர் ஸ்டாம்பை பயன்படுத்தும்போது நாம்தான் முட்டாள்கள் என கடுமையாக தாக்கியிருந்தது. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிக்கை ‘The Real Day-Night Test is in Mumbai’ (மும்பையில் நடந்த உண்மையான பகல்- இரவு டெஸ்ட் போட்டி) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது. இந்தியா-வங்கதேசம் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் பிங்க் நிற பந்தில் நடத்தப்பட்ட பகல்-இரவு போட்டி கடந்த வெள்ளியன்று தொடங்கியது. இதை மறைமுகமாக சுட்டிக்காட்டியே, உண்மையான பகல்-இரவு போட்டி மும்பையில் நடந்ததாக அந்த பத்திரிக்கை கிண்டலடித்திருந்தது. ‘மெயில் டுடே’ என்ற பத்திரிக்கை ‘Maha coup’ ( மகாராஷ்டிரா கலகம்) என தலைப்பிட்டிருந்தது. இதேபோல், ‘டெக்கன் கிரானிக்கல்’ உட்பட பல பத்திரிக்கைகள் வித்தியாசமான தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தன.


Tags : fools ,newspapers , Why , fools, bleached,newspapers
× RELATED ஜோதிட ரகசியங்கள்