×

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: பிஷ்ராம்பூர் பரப்புரையில் ராஜ்நாத் சிங் பேச்சு

ராஞ்சி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ம் தேதி வரை 5 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 23-ம் தேதி வெளியாகிறது. இந்த தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பரப்பரையில் ஈடுபட்டு வருகின்றன. பிஷ்ராம்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர்; அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. ஏனென்றால் அதற்கு இருந்த தடையை உச்சநீதிமன்றம் விலக்கியுள்ளது. அதேபோல ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை நாங்கள் எந்தவித கால தாமதமும் இன்றி நீக்கியுள்ளோம். இதனால் தற்போது இந்தியாவில் ஒரே அரசியலமைப்புச் சட்டம் உள்ளது. ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய ராஜ்நாத், நாட்டில் 2 சட்டங்கள், 2 கொடிகள் இருக்கக் கூடாது என்ற பாரதிய ஜனசங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் கனவை பாஜக நிறைவேற்றி விட்டதாக குறிப்பிட்டார்.

Tags : Rajnath Singh ,building ,Ayodhya ,Ram temple ,Bishrampur Parappuram No ,temple building ,Bishrampur ,Ram , Ayodhya, Rama Temple, Rajnath Singh
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...