×

உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலியின் குழந்தைகளுக்கு சூடு : கொத்தனார் கைது

தண்டையார்பேட்டை: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலியின் குழந்தைகளுக்கு சூடு வைத்து சித்ரவதை செய்த கொத்தனார் கைது செய்யப்பட்டார்.மதுரை மேலூரை சேர்ந்தவர் கடம்பன் (33). இவர், சென்னை கொருக்குப்பேட்டை பெருமாள் கோயில் தெருவில் தங்கி, கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி, குழந்தைகள் சொந்த ஊரில் வசித்து வருகின்றனர். கடம்பன் வேலைக்காக அடிக்கடி வெளியூர் செல்வது வழக்கம்.  அதன்படி, கோவைக்கு சென்று கட்டிட வேலை செய்தபோது, அதே பகுதியை சேர்ந்த நந்தினி (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நந்தினிக்கு திருமணமாகி கணவன், குழந்தைகளுடன் வசித்து வந்தார். நாளடைவில், கடம்பனுடன் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.

இதுபற்றி அறிந்த நந்தினியின் கணவன், இருவரையும் கண்டித்துள்ளார். இதனால், கடந்த 3 மாதத்துக்கு முன், நந்தினி மற்றும் அவரது 2 குழந்தைகளை கொருக்குப்பேட்டைக்கு அழைத்து வந்த கடம்பன், வாடகை வீட்டில் குடித்தனம் நடத்தி வந்தார். அங்கு, இவர்கள் உல்லாசமாக இருப்பதற்கு குழந்தைகள் இடையூறாக இருந்ததாக தெரிகிறது. இதனால், 2 குழந்தைகளையும் கடம்பன் அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும், சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளார். இதுபற்றி அறிந்த அக்கம் பக்கத்தினர், சைல்டு ஹெல்ப்லைன் அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், சைல்டு ஹெல்ப்லைன் நிர்வாகிகள் கொருக்குப்பேட்டை போலீசார் உதவியுடன் நேற்று சம்பவ இடத்துக்கு வந்து நந்தினி, அவரது குழந்தைகளிடம் விசாரித்துள்ளனர். அப்போது உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் நந்தினியின் குழந்தைகளை கடம்பன் அடித்து உதைத்ததுடன், சூடுவைத்து கொடுமைப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து கடம்பனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். நந்தினி மற்றும் குழந்தைகளை சென்னை பெரவள்ளூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.



Tags : Counterfeiters ,gangs ,Children Up to Amusement War ,Kotanar , disruption , amusement, counterfeiters, Kotanar, arrested
× RELATED மேடையில் அஞ்சலியை தள்ளிவிட்ட பாலகிருஷ்ணா: சினிமா விழாவில் பரபரப்பு