×

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அமமுக இன்று முதல் விருப்ப மனு: டிடிவி.தினகரன் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக கட்சிகள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றுள்ளன. இதேபோல், கூட்டணி கட்சிகளும் விருப்ப மனுவை பெற்று வருகிறது. இந்நிலையில், உட்கட்சி பிரச்னை காரணமாக அமமுக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாது என கருதப்பட்டது.  ஆனால், அமமுக கண்டிப்பாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்தார். இதற்காக, தஞ்சை, சேலம், திருச்சி, கோவை உள்ளிட்ட மண்டலங்களில் அவர் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டங்களையும் நடத்தினார்.

இந்தநிலையில், அமமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் இன்று முதல் விருப்ப மனுவை அளிக்கலாம் என டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:  தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில், அமமுக சார்பில்  வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோர் அதற்கான விருப்பமனுக்களை வரும் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை அந்தந்த மாவட்டத்தில் உள்ள அமமுக மாவட்ட அலுவலகங்களில், காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை தலைமைக்கழக  நிர்வாகிகளின் தலைமையில்  அமைக்கப்பட்டுள்ள குழுவினரிடம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அக்குழுவினரிடமே அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.


Tags : DMK ,government ,elections ,Ammk ,titivitinakaran Announcement , Local Election,Ammk,TTV.Dinakaran
× RELATED திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்