×

கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூடல் ஏன்? நிர்வாகம் விளக்கம்

சென்னை, நவ.24:கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூடல் ஏன் என்பது தொடர்பாக கோ ஆப்டெக்ஸ் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் வருவாய் இழப்பை காரணம் காட்டி 42 விற்பனை நிலையங்கள் கடந்த 3 ஆண்டுகளில் மூடப்பட்டது.இதற்கான காரணம் குறித்து அதன் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் வெங்கடாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கை: போட்டி மிகுந்து விட்ட, மாறி வரும் இன்றைய ஜவுளி வியாபாரச் சந்தையில் தனித்தன்மையுடன் செயலாற்றி, எதிர்காலத்தில் நிலைத்து நிற்பதற்காக கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் பல்வேறு நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. பல விற்பனை நிலையங்கள் வாடகை நிர்ணயம் சம்பந்தமாக நீதிமன்ற வழக்குகளில் உள்ளது.

தொடர்ந்து நட்டத்தில் சில விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. வியாபார சந்தை இட மாற்றம் காரணமாக சில விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர் வருகை மிக குறைந்து வருகிறது.  ஆகவே, செலவினத்தை குறைக்கவும், விற்பனை நிலையங்களை லாபத்தில் இயங்க வைக்கவும் சில விற்பனை நிலையங்களை மூடிவிட்டு, அதற்கு பதிலாக சரியான இடம் தேர்வு செய்யப்பட்டு, நவீனப்படுத்தப்பட்டு தனியாருக்கு ஈடாக விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டு, வியாபார வளர்ச்சியும் அடைந்து வருகிறது.  இவையெல்லாம் விற்பனை வளர்ச்சிக்காக மேற்கொண்ட நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகும். மேலும் விற்பனை பெருக்க திட்டங்களுக்காக நாங்கள் பல ஆலோசனைகளையும் பெற்று செயல்படுத்தி வருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Go Apex ,Co Apex , Go optex
× RELATED கோ ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்