×

குளக்கரையை உடைத்து ரோடு போடுவதை கண்டித்து தாழையூத்து அருகே பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

தாழையூத்து: தாழையூத்து அருகே குளக்கரையை உடைத்து ரோடு போடுவதால் ஊருக்குள் தண்ணீர் புகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் கொந்தளித்த மக்கள் அங்கு மறியலில் ஈடுபட்டனர். தாழையூத்தையடுத்த நாரணம்மாள்புரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசின் அரிசி ஆலை உள்ளது. இங்கு குளம் உள்ளது. மழையால் தற்போது குளம் நிரம்பி விட்டது. இந்த இடத்தில் புதிதாக நான்கு வழிச்சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி குளக்கரையில் 15 மீட்டர் தூரத்திற்கு கரையை உடைத்து அதில் தடுப்பு சுவர் கட்டியிருக்கிறார்கள். கரையை உடைத்ததால் அருகில் உள்ள உக்கிரன்நகர் பகுதியில் தண்ணீர் புகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இங்கு வசித்து வரும் 200 குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள். இதனால் கரையில் மீண்டும் மணல் கொட்டி கரையை பலப்படுத்தவேண்டும் என உக்கிரன்நகர் மக்கள் கோரிக்கை விடுத்ததோடு இன்று காலை ஆண், பெண் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். தகவலறிந்து தாழையூத்து இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, மற்றும் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 2 நாளில் கரை சீர்படுத்தப்படும், இதையொட்டி மேலதிகாரிகளிடம் தெரிவிக்கப்படும் என்றனர். இதையொட்டி பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டதோடு, இருநாளில் சரி செய்யவிட்டால் மீண்டும் சாலை மறியல் செய்வோம் என எச்சரித்துள்ளனர். பொதுமக்கள் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Tags : demonstration ,bottom ,lake ,breaking ,pond , Demonstrating , denigrating , pool
× RELATED பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்..!!