×

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு; பாஜகவை ஆதரிப்பது கட்சியின் முடிவு அல்ல சரத்பவார் அறிவிப்பு

மும்பை: பாஜகவை ஆதரிப்பது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவு அல்ல என்று சரத்பவார் தெரிவித்துள்ளார். பாஜகவோடு கூட்டணி ஏற்படுத்தியிருப்பது தமது உறவினர் அஜித் பவாரின் தனப்பட்ட முடிவு என்று சரத்பவார் தெரிவித்துள்ளார். துணை முதல்வராக பதவி ஏற்றுள்ள அஜித்பவாருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜனதா 105, சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றன.

ஆட்சியமைக்க இந்த கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்த போதிலும், முதல்வர் பதவி தொடர்பான மோதல் காரணமாக பா.ஜனதா உடனான கூட்டணியை சிவசேனா முறித்துக் கொண்டதால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்தது. இந்நிலையில், முந்தைய சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வந்ததால் கடந்த 12ம் தேதியன்று மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

பாஜவை ஒதுக்கி விட்டு, 54 இடங்களில் வெற்றி பெற்ற தேசியவாத காங்கிரஸ் மற்றும் 44 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரசுடன் புதிய கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க சிவசேனா தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. இந்நிலையில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்துள்ளது. இதில் அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். ஆனால் இந்த முடிவு கட்சியின் முடிவு அல்ல என்று சரத்பவார் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக விளக்கம்

தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சார்பில் அஜித் பவார் ஆதரவு கடிதம் அளித்ததால் பதவியேற்பு நடந்தது என்று பாஜகவின் கிரிஷ் மகாஜன் தெரிவித்துள்ளார். மேலும்  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் என்ற அடிப்படையில் அஜித் பவார் ஆதரவு அளித்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.

சரத்பவார் மகள்


தேசியவாத காங்கிரஸ் கட்சியும், குடும்பமும் உடைந்துவிட்டதாக கட்சி தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.


Tags : Split ,announcement ,party ,Sarath Pawar ,BJP ,Nationalist Congress Party ,Congress ,Nationalist ,Ajit Pawar ,Maharashtra ,Sharad Pawar , Nationalist Congress, Sharad Pawar, Ajit Pawar, BJP, Maharashtra, Maratha Politics
× RELATED தேர்தலில் வென்ற தெலுங்கு தேசம்...