×

கே.ஆர்.எஸ் அணை முழு கொள்ளளவுடன் சாதனை

பெங்களூரு: கர்நாடகா-தமிழக விவசாயிகளின் ஜீவநாடியாக விளங்கும் கே.ஆர்.எஸ். அணை  கடந்த 86 ஆண்டுகளுக்கு பின் 100வது நாளாக அதன் முழு கொள்ளளவை  குறைவில்லாமல் தக்க வைத்துள்ளது.  காவிரியின் குறுக்கே மண்டியா  மாவட்டம், ரங்கபட்டணா தாலுகாவில் உள்ள கண்ணம்பாடி கிராமத்தில் கடந்த  1938ம் ஆண்டு அணை கட்ட அப்போது மைசூரு மன்னராக இருந்த ஜெயசாமராஜேந்திர  உடையார் முடிவு செய்தார். விஞ்ஞானி சர்.எம்.விஷ்வேஸ்வரையாவின்  ஒத்துழைப்பில் கட்டி முடிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் நல்ல மழை பெய்ததால் அணை  நிரம்பி வந்தது. இடையில் இயற்கை கை விட்டதால் பல சந்தர்ப்பங்களில் அணை  நிரம்பாமல் வறண்டும் காணப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம்  பெய்த கனமழை காரணமாக கே.ஆர்.எஸ். அணை அதன் முழு கொள்ளளவான 124.80 அடியை  11ம் தேதி எட்டியது. இன்றுடன் 100வது நாளாக முழு கொள்ளளவை குறைவில்லாமல்  தக்க வைத்து வருகிறது. இது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது.

Tags : KRS Dam , The KRS Dam
× RELATED கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு...