×

புயல், மழை, கோடை காலங்களில் பணியாற்ற ஆட்டுக்கல், அம்மிக்கல் தயாரிப்பு தொழிலாளர்களுக்கு மேற்கூரை வசதி

க.பரமத்தி : வேலாயுதம்பாளையம் பகுதியில் ஆட்டுக்கல் மற்றும் அம்மிக்கல் தயாரிப்பு தொழிலாளர்களுக்கு புயல் மழை, கோடை வெயில் காலங்களில் பணியாற்ற மேற் கூரை அமைத்து தர அரசு உதவ முன் வர வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் ஒன்றியம் புஞ்சைபுகழூர் பேரூராட்சியில் வேலாயுதம்பாளையம் நொய்யல் நெடுஞ்சாலையில் ஆட்டுக்கல் மற்றும் அம்மிக்கல் தயாரிப்பு பணிகளில் குடும்பத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டுக்கல், அம்மிக்கல் உரல் தயாரிக்கும் பணிகளை செய்து வருகின்றனர். மிக்சி, கிரைண்டர் போன்றவை கண்டுபிடிக்காத காலத்துக்கு முன்பு இருந்தே இந்த தொழில் செய்து வருவதாகவும் கடந்த 17ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இத்தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

இதனால் பலரும் ஆட்டுக்கல், அம்மிக்கல் ஆகியவற்றை தயாரிப்பு செய்து ஊர் ஊராக உள்ள குக்கிராமங்களில் விற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளனர்.இதனால் இப்பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு நல்ல வருவாய் கிடைத்து வந்ததால் இப்பணிகளில் பலரும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். தற்போதும் கடந்த 11 ஆண்டுகளாக மிக்சி, கிரைண்டர் போன்றவை வரத்தொடங்கியதும், மெல்ல மெல்ல இந்த தொழில் நலிவடைந்ததால் காலநிலை மாற்றம், நவீனங்கள் வருகை போன்றவற்றால் இந்த தொழிலில் ஈடுபட்டவர்கள் ஒரு சிலர் வெளியூருக்கு சென்று மாற்றுத்தொழிலுக்கு சென்று விட்டனர்.தற்போது ஒரிரு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே ஆட்டுக்கல் மற்றும் அம்மிக்கல் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுவும் புயல் மழை மற்றும் அக்னி வெயில், கோடை வெயில் போன்ற காலங்களில் இப்பணிகளை முழுநேரமாக முழுமையாக செய்ய முடியாமல் பாதிப்புக்குள்ளாகி விடுகிறது. இதனால் இத்தொழில் சிறிது சிறியதாக நலிவடைந்து வருவதாகவும் எனவே இந்த தொழிலை நலிவில் இருந்து காப்பாற்றவும் புயல் மழை, அக்னி வெயில் போன்ற காலங்களில் தொழிலாளர்கள் பணியாற்ற முடிவதில்லை. எனவே அரசு மேற்கூரை அமைக்க அரசு உதவி செய்ய முன்வர வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Roofing facility ,storms ,Ammikal , Cyclone ,Rainy Season,Summer time,aatukkal , Ammikal
× RELATED இன்று மே 1ம் தேதி தொழிலாளர் தினம்;...