நீதிமன்ற ஊழியர் சாலை விபத்தில் பலி

திருவொற்றியூர்: ஆவடி ராம் நகர் 4வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாபு (47). அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று காலை மணலியில் உள்ள நண்பரை பார்க்க தனது பைக்கில் புறப்பட்டார். மஞ்சம்பாக்கம் 200 அடி சாலையில் சென்றபோது, இவரது பைக் மீது கனரக வாகனம் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றது.இதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பாபு உயிரிழந்தார். இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>