×

13 அமெரிக்க நானோ செயற்கைகோள்களுடன் கார்டோசாட்-3 செயற்கைக்கோள் 25ம் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்‌ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பெங்களூரு: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கார்டோசாட்-3, 13 சிறிய ரக வர்த்தக செயற்கைகோள்களை வரும் 25ம் தேதி விண்ணில் செலுத்த இருப்பதாக இஸ்ரோ  தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ,  கார்டோசாட்-3 என்ற செயற்கைகோளை உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது. இத்துடன் அமெரிக்காவின் 13 சிறிய ரக வர்த்தக செயற்கைகோள்களும் பிஎஸ்எல்வி  சி-47 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து வரும் 25ம் தேதி காலை 9.28 மணிக்கு செலுத்தப்பட உள்ளன. இது அங்கிருந்து செலுத்தப்படும் 74வது ராக்கெட் ஆகும். கார்டோசாட்-3  புவியைப் படம் பிடிக்கும் மூன்றாம் தலைமுறை செயற்கைக் கோளாகும். இது,  பூமியில் உள்ள குறிப்பிட்ட இடத்தை மிக அருகாமையில் படம் பிடித்துக் காட்டும் வசதி உடையது. பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் கவுன்ட் டவுன் வரும் 23ல் தொடங்கப்பட உள்ளது.



Tags : US ,announcement ,ISRO ,CardoSat-3 ,nano-satellites launch , 13 US Nano Satellite, Cardosat-3, ISRO
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!