டிக் டாக்’குக்கு தடை கோரி மும்பை ஐகோர்ட்டில் வழக்கு

மும்பை: `டிக் டாக்’ செயலியில் வெளியாகும் தடையில்லா ஆபாச வீடியோக்கள் நாட்டின் இளைஞர் சமுதாயத்தை சீரழிக்கிறது. எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றத்தில், ஹீனா தர்வேஷ் என்பவர் பொதுநல மனு, தாக்கல் செய்துள்ளார். கடந்த 11ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், நகைச்சுவை மற்றும் பாடல் கொண்ட வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் ‘டிக் டாக்’ செயலி கடந்த 2017ம் ஆண்டு `பைட்டான்ஸ்’ என்ற சீன நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால் அதில் பதிவேற்றம் செய்யப்படும் தடையில்லா ஆபாச வீடியோக்கள் இளைஞர் சமுதாயத்தை சீரழிக்கிறது. கடந்த ஜூலையில் டிக்டாக் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களினால் இருதரப்பினரிடையே வன்முறையை தூண்டியதாக மும்பை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இதேபோன்று, கடந்தாண்டு சென்னை உயர்நீதிமன்றத்திலும் இச்செயலிக்கு தடை விதிக்க கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>