×

கடலோர மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை: கடலோர மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில், மிதமான மழை அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் ,  மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நவம்பர் 17 மற்றும் 18-ம் தேதிகளில் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றும், 19, 20-ம் தேதிகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் வெப்பநிலை அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் பி.டி.ஓ.வில் 17 சென்டிமீட்டரும், குன்னூர் டவுனில் 14 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

Tags : districts ,Chennai Meteorological Center ,heat storms ,heatwave , Heat Convection, Light Rain, Chennai Weather Center
× RELATED 5ம் தேதி வரை வெப்ப அலை வீசும்; வேலூரில்...