×

முருகன் உண்ணாவிரதம் வாபஸ்

வேலூர்: ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 11ம் தேதி உண்ணாவிரதம் தொடங்கினார். தொடர்ந்து கடந்த 14ம் தேதி முதல் நீர் குடிக்கவும் மறுத்துவிட்டார். இதற்கிடையில் முருகனின் உறவினர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், சிறையில் முருகனுக்கு ரத்து செய்யப்பட்ட சலுகைகளை திரும்ப வழங்க நீதிபதிகள் கடந்த 14ம் தேதி உத்தரவிட்டனர். நேற்று மதியம் முருகனை, அவரது வழக்கறிஞர் புகழேந்தி சந்தித்து இதுபற்றி கூறியபின் உண்ணாவிரதத்தை கைவிட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Murugan , Murugan fasting back
× RELATED பாஜ தலைவர் முருகன் பழநியில் கைது