×

மார்த்தாண்டம் மார்க்கெட் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக ஜல்லி, தார்

மார்த்தாண்டம்: மார்த்தாண்டத்தில் முக்கிய சாலைகளில் ஒன்றாக மார்க்கெட் ரோடு விளங்கி வருகிறது. இந்த சாலையில்தான் மார்த்தாண்டம் புதிய பஸ் நிலையமும் உள்ளது. மேலும் மார்க்கெட், வர்த்தக நிறுவனங்கள், சர்ச், டாஸ்மாக் கடைகள் என பல நிறுவனங்கள் உள்ளதால் எப்போதும் இந்த சாலை பிஸியாகவே இருக்கும். மார்க்கெட் ரோட்டில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், பஸ் நிலையத்துக்கு வரும் பஸ்கள் உட்பட வாகனங்கள் செல்லமுடியாமல் அடிக்கடி கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

மார்க்கெட் சாலையில் ரூ.30 லட்சம் செலவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட காங்கிரீட் தளமும் பழுதடைந்து சீரழிந்து சின்னாபின்னமாக காணப்படுகிறது. இதுவும் போக்குவரத்து நெருக்கடியை அதிகரித்து வருகிறது. மேலும், ரோட்டோரம் நிறுத்தப்படும் மினி பஸ்களும் போக்குவரத்து நெருக்கடிக்கு காரணமாகின்றன. இந்த நிலையில் மார்க்கெட் சாலையை சீரமைக்க ஜல்லி, தார், இயந்திரங்கள், விறகு போன்றவை சாலையோரம் குவிக்கப்பட்டுள்ளன. இவற்றை குவித்து ஒரு மாதம் கடந்த பின்பும் இன்னும் வேலை தொடங்கவில்லை.

இதனால் இந்த சாலையில் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. இதனால் நாள்தோறும் பொதுமக்கள் சொல்லொணா துயரை அடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Thar ,Marthandam , Marthandam, Transport, Jalli, Dhar
× RELATED சூலத்தேவருடன் தேரில் எழுந்தருளினார்...