×

வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றுவதில்லை..மக்கள் தீர்ப்பினை ஏற்க பாஜக மறுப்பு : சாமனா நாளிதழில் சிவசேனா பாய்ச்சல்

மும்பை : பாஜக தமது வாக்குறுதிகளை கடைப்பிடித்து இருந்தால் மராட்டியத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டு இருக்காது என்று சிவசேனா கூறியுள்ளது. பாஜக சிவசேனா கூட்டணியின் ஒன்றுச் சேர்ந்த கொள்கைகளுக்கு தான் மராட்டிய மக்கள் வாக்களித்து இருப்பதாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாமனாவின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் அளித்த தீர்ப்பினை ஏற்றுக் கொள்ள பாஜக தயாராக இல்லை என்றும் அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனால் தான் மராட்டியத்தில் நிலையான அரசினை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக சிவசேனா விளக்கம் அளித்துள்ளது. மராட்டியத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு இருப்பதற்கு சிவசேனா காரணம் அல்ல என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பு தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றி இருந்தால் மராட்டியத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை முற்றிலும் தவிர்த்து இருக்கலாம் என்றும் சிவசேனா தெரிவித்து இருக்கிறது. இதனிடையே மராட்டியத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட்டு உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 21ம் தேதி நடந்தது. இதில், கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜ 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. மற்றொரு கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும், காங்கிரஸ் 44 இடங்களையும் கைப்பற்றின. பாஜ-சிவசேனா கூட்டணிக்கு ஆட்சிஅமைப்பதற்கான பெரும்பான்மை பலம் இருந்தும், முதல்வர் பதவியை சுழற்சி முறையில் பங்கிட்டு கொள்ளும் விவகாரத்தில் விரிசல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தேவையான பலம் எந்த கட்சிக்கு இல்லாததால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர இருப்பதாக அறிவித்துள்ளது.

Tags : BJP ,Shiv Sena ,Samana , BJP, Shiv Sena, Maratha, Samana, President, Governance, Supreme Court
× RELATED சிவசேனா, தேசியவாத காங்கிரசை போல்...