×

8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தொழில்துறை உற்பத்தி 4.3 சதவீதம் குறைந்தது

புதுடெல்லி: நாட்டின் தொழில்துறை உற்பத்தியானது கடந்த செப்டம்பர் மாதத்தில் 8 ஆண்டுகளில் இல்லாத வகையில் 4.3 சதவீதம் குறைந்துள்ளது.
நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய பொருட்கள், உரம், உருக்கு, சிமென்ட் மற்றும் மின்சாரம் ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் 8 உள்கட்டமைப்பு துறைகளாகும். குறிப்பிட்ட கால கட்டத்தில் தொழில் பிரிவுகளின் உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்களை வைத்து  தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் அளவிடப்படுகிறது. இந்நிலையில், 8 ஆண்டுகளில் இல்லாத அளவில் தொழில்துறை உற்பத்தி பெரும் சரிவை சந்தித்து உள்ளதாக புள்ளி விவரம் வெளியாகி உள்ளது.  

கடந்த செப்டம்பரில் தொழில்துறை உற்பத்தி ஒப்பந்தங்கள் 4.3 சதவீதம் குறைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட்டில் தொழில்துறை உற்பத்தி 4.6 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது.  ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 1.3 சதவீதமாகும். இதுவே, கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் 5.2 சதவீதமாக இருந்தது. 2011-2012க்கு பின்னர் தொழில்துறை உற்பத்தியின் மாதாந்திர வளர்ச்சி, தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது.


Tags : Industrial and manufacturing declined
× RELATED 2025-26ம் ஆண்டில் இருந்து சிபிஎஸ்இயில்...