×

தீர்ப்பாய உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்கள் நிபுணர்களாக இருக்க வேண்டும்!: கிரிஜா வைத்தியநாதனுக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட் கருத்து..!!

சென்னை: தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் நிபுணத்துவ உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்கள் நிபுணர்களாக இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தேசிய  பசுமை தீர்ப்பாய  நிபுணத்துவ உறுப்பினராக முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. மனுவில், விதிகளின்படி சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், 3 ஆண்டுகள் 6 மாதங்கள் மட்டுமே அனுபவம் கொண்ட கிரிஜா வைத்தியநாதன்  நியமிக்கப்பட்டுள்ளார். இது பசுமை தீர்ப்பாய விதிகளுக்கு எதிரானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது வரி, சுற்றுச்சூழல், நுகர்வோர் விவகாரங்களில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு போதிய நிபுணத்துவம் இல்லை என்பதாலேயே மத்திய அரசு தீர்பாயங்களை உருவாக்கியது என நீதிபதிகள் குறிப்பிட்டார்கள். மேலும் நிபுணராக இல்லாத ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தற்போது நியமிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்கள் நிபுணர்களாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்கள். அச்சமயம் ஆஜரான மத்திய அரசினுடைய கூடுதல் குறிக்கீட்டு ஜென்ரல், விதிகளின்படி சுற்றுச்சூழல் படிப்பில் முதுகலை அல்லது முனைவர் பட்டம் பெற்று, 20 ஆண்டு இந்திய ஆட்சிப்பணி அனுபவமும், 4 ஆண்டு சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து பெரும்பாலான அரசு நிறுவனங்களில் நிர்வாக கட்டுப்பாட்டை கவனிப்பது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தான் எனவும் குறிப்பிட்டார். இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டி இருப்பதால் விசாரணையை வருகின்ற திங்கட்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். …

The post தீர்ப்பாய உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்கள் நிபுணர்களாக இருக்க வேண்டும்!: கிரிஜா வைத்தியநாதனுக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட் கருத்து..!! appeared first on Dinakaran.

Tags : ECtHR ,Girija Vaidyanathan ,Chennai ,Madras High Court ,South Zone Green Tribunal ,ICourt ,Dinakaran ,
× RELATED குற்றச் செயலில் ஈடுபடுவோர்...