×

ஆன்லைன் மாயவலை ஆபத்தானது என்பதை மக்கள் உணருவர்: சமுத்திரக்கனி, இயக்குனர் மற்றும் நடிகர்

ஆன்லைன் வர்த்தகத்தால் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதை யாராலும் மறுக்க முடியாது. இதனால் கடுமையான பாதிப்பு அடைந்தவர்கள், நடைபாதை வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரிகள். தெருவில் ஊர்ந்து வரும் தள்ளுவண்டி  கடைகளையும், ரோட்டோர பெட்டிக்கடைகளையும், தெருமுனைகளில் சாதாரண கடைகளையும் நடத்துபவர்களில் பெரும்பாலானோர், இப்போது எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சிறிய கடைகளில் விற்கப்படும் ஆர்கானிக் காய்கறிகளை பார்த்து நாளாகி விட்டது. அவர்கள் ஆன்லைன் வர்த்தகர்களால் ஒதுக்கப்பட்டு விட்டனர். எளியவர்களை, சிறு வியாபாரிகளை அழிக்க முயற்சிக்கும் ஆன்லைன் வர்த்தகத்துக்கு மாற்றுவழி  என்ன என்பதை யோசித்து, உடனே அதை செயல்படுத்த வேண்டும். முகம் தெரியாதவர்களிடம் இருந்து பெறப்படும் பொருட்கள் தரமானவையா என்று நாம் ஆராய்வதில்லை. ஆன்லைன் மூலம் வாங்கி உபயோகிக்கும் பொருட்களால் சிறு வணிகர்கள், தள்ளுவண்டி மற்றும் பெட்டிக்கடைக்கார்கள் எவ்வளவு  பாதிக்கப்படுகிறார்கள் என்று நாம் யோசிக்க வேண்டும். தங்கள் தொழிலை மட்டுமே நம்பி உழைக்கும் எளிய வியாபாரிகள், ஆன்லைன் வர்த்தகம் விஸ்வரூபம் எடுத்ததால், தங்கள் எதிர்கால வாழ்வை தொலைத்துவிட்டு, எங்கே செல்வது  என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.   நான் முதல்முறை சென்னைக்கு வந்தபோது, ரோட்டோரம் குவியல் குவியலாக வைத்திருந்த கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்பட வீட்டு சமையலுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சாப்பிட்டது நினைவுக்கு வருகிறது. இன்றைய  நிலையை பார்த்தால், அனைவரும் மாய உலகத்தில் சஞ்சரிப்பது போல் தோன்றுகிறது. இதில் வசமாக சிக்கிக்கொண்டு, இனி மீள முடியாது என்பது போல் பாசாங்கு செய்கிறார்கள். ஆபத்தானது என்பதை என்றாவது அவர்கள் உணர்வர்.  நாள்தோறும் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் வணிக சந்தைக்குள் தங்கள் கிளைகளை பரப்பி வருகின்றன. சிறு வணிகர்களை காப்பாற்ற என்ன வழி? இதற்கு நிரந்தர தீர்வு என்ன என்று பல  கேள்விகள் நீள்கின்றன.

 அரசாங்கமும், அதிகாரத்தில் இருப்பவர்களும் சிறு வணிகர்களை எப்படி காப்பாற்றுவது என்று சட்டம் இயற்ற வேண்டும். இனி நாங்கள் எங்கே செல்வது? எப்படி பிழைப்பது என்று தெரியாமல் தவிக்கும் அவர்களுக்கான தீர்வு காணப்பட  வேண்டும். அரசாங்கம் உடனே தலையிட்டால் மட்டுமே சிறு வணிகர்களும், தள்ளுவண்டி மற்றும் பெட்டிக்கடைக்காரர்களும், ரோட்டோரம் குவியல் கட்டி விற்பனை செய்பவர்களும் பாதுகாக்கப்படுவார்கள். இதற்குமுன் தள்ளுவண்டியில்  வியாபாரம் செய்தவர்களில் பலர், இப்போது வாட்ச்மேன் வேலைக்கு சென்றுவிட்டார்கள். தினந்தோறும் வியாபாரம் நடக்கவில்லை என்றால், பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்? சாப்பாட்டுக்கும், வாழ்க்கை நடத்துவதற்கும் எங்ேக  செல்வார்கள்?பிளாட்டுகளில் ஸ்டோர் வசதி வந்துவிட்டது. போன் செய்தால், எல்லா பொருட்களும் வீடு தேடி வந்துவிடும் என்ற சொகுசு வாழ்க்கை மக்களுக்கு பழகிவிட்டது. மற்ற வீடுகளில் ஆன்லைன் வர்த்தகத்தை நாடுகிறார்களே, நாமும் அதுபோல்  செய்தால் என்ன என்ற ஆசையும், ஆர்வமும் பொதுமக்களிடம் காணப்படுகிறது.
குடும்பத்துடன் சந்தைக்கு சென்று, தரமான பொருட்கள் வாங்கி வந்த காலம் மீண்டும் வர வேண்டும். சந்தைகளில்தான் வித்தியாசமான, கிடைப்பதற்கு அரிய பொருட்கள் கிடைக்கும். நிறைய மூலிகைகளும், புத்தம் புதிய காய்கறிகளும்  கிடைக்கும். எனவே, ஆன்லைன் வர்த்தகத்துக்கு மாற்றுவழி கண்டுபிடிக்க வேண்டும். புதுமைகள் வரட்டும். ஆனால், பழமையை காப்பாற்ற வேண்டியது நம் கடமை அல்லவா?இன்றைய நிலையை பார்த்தால், அனைவரும் மாய உலகத்தில் சஞ்சரிப்பது போல் தோன்றுகிறது. இதில் வசமாக சிக்கிக்கொண்டு, இனி மீள முடியாது என்பது போல் பாசாங்கு செய்கிறார்கள்.

Tags : actor ,Samudrakani , Online magic, dangerous,Samudrakani, director ,actor
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்...