×

பட்டிவீரன்பட்டி அருகே 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகே சிக்கிய மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு  மலைப்பகுதியில் விட்டனர். திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவு மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வடக்கு வாய்க்கால் பகுதியில் 100 நாட்கள் வேலைத் திட்டத்தில் பணியாளர்கள் வாய்க்கால் பகுதியில் உள்ள செடிகளை அகற்றிக் கொண்டு இருந்தனர். அப்போது வாய்க்கால் பகுதியில் பாம்பு ஒன்று கிடப்பது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் வத்தலக்குண்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த வனத்துறை வேட்டைத்தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.  

இதைத் தொடர்ந்து வாய்க்கால் பகுதியில் 10 அடிநீளமும் சுமார் 8 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பு கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து மலைப்பாம்பை உயிருடன் லாவகமாக பிடித்து மட்டமலை பகுதியில் உள்ள மலைப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். மழை காலமாக இருப்பதால் மலைப்பகுதியை விட்டு வெளியேறி வந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும், காட்டு பகுதியில் வேலைக்கு செல்பவர்கள் கவனமாக செல்ல வேண்டும் என பொதுமக்களை வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags : Pativeeranpatti , Pattiviranpatti, python
× RELATED பட்டிவீரன்பட்டி அருகே பற்றி எரிந்த...