×

அர்ப்பணிப்புடன் பாதுகாத்த எஸ்பிஜி.க்கு சோனியா பாராட்டு

புதுடெல்லி: அர்ப்பணிப்புடன் பாதுகாத்த சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நன்றி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு கடந்த 28 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பை,  மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை திரும்ப பெற்றது.

இந்நிலையில், சிறப்பு பாதுகாப்பு படை பிரிவின் இயக்குனர் அருண் குமார் சின்காவுக்கு சோனியா காந்தி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
எனது மற்றும் எனது குடும்பத்தினரின் பாதுகாப்பு, சிறப்பு பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், மிகவும் நம்பிக்கைக்குரியவர்களிடம் எங்களது வாழ்க்கை ஒப்படைக்கப்பட்டதாக நம்பிக்கையும் உறுதியும் கிடைத்தது.

கடந்த 28 ஆண்டுகளாக, ஒவ்வொரு நாளும், தவறாத நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும், தொழில் சார்ந்த மனப்பான்மையுடனும் நீங்கள் எங்களை பாதுகாத்தீர்கள். உங்களுக்கு அளிக்கப்பட்ட பணியில் தைரியத்துடன், நாட்டு பற்றுடன் உற்சாகமாக உழைத்த ஈடு இணையற்ற படை சிறப்பு பாதுகாப்பு படை. உங்களுக்கு எனது குடும்பத்தினர் சார்பில், பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, ராகுல் காந்தி சிறப்பு பாதுகாப்பு படைக்கு தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளித்ததற்கு நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Sonia , Dedicated, Protected Espg., Sonia, Appreciation
× RELATED 3 நாள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் சோனியா காந்தி