×

ஊழியர்கள், பொதுமக்கள் எளிதாக கையாளும் வகையில் சென்னை மாநகராட்சி பணிக்கான சாப்ட்வேரை மேம்படுத்த முடிவு

* அனைத்து தரப்பினர் கருத்தை கேட்க வேண்டும் * ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தல்

சென்னை : சென்னை மாநகராட்சியில் கணினி மயமாக்கப்பட்டுள்ள பணிகளின் தரம் தொடர்பாக அனைத்து தரப்பினர் மேம்படுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.சென்னை மாநகராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றிவருகின்றனர். திடக்கழிவு மேலாண்மை, சுகாதாராம், வருவாய் மற்றும் நிதி, சாலை மேம்பாடு, மழைநீர் வடிகால் உள்ளிட்ட முக்கிய துறைகள் உட்பட 10க்கு  மேற்பட்ட துறைகள் உள்ளன. இந்த துறைகளில் பல்வேறு பணிகள் கணினிமயம் ஆக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பொதுமக்கள் சொத்துவரியை இணையதளம் மூலம் செலுத்தும் வசதி, பிறப்பு இறப்பு சான்றிதழ்களை இணையதளம் மூலம்  பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளிட்ட பணிகள் கணினிமயம் ஆக்கப்பட்டுள்ளன. இதைத்தவிர்த்து திடக்கழிவு மேலாண்மை தொடர்பான இயங்கும் லாரிகளை ஜிபிஎஸ் முறையில் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளும் கணினி மயம்  ஆக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்தப் பணிகள் தொடர்பாகவும் நிறுவன வளத் திட்டமிடல் மென்பொருள் தொடர்பாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு செய்தார். இந்தக் கூட்டத்தில் வருவாய் மற்றும் நிதித்துறை இணை ஆணையர் லலிதா,  பணிகள் துறை துணை ஆணையர் கோவிந்தராவ், நிதி ஆலோசகர் அய்யனார், தலைமை பொறியாளர்கள் மகேசன், நந்தக்குமார், துரைசாமி, ராஜேந்திரன், காளிமுத்து, கணினி மையத்தின் முதுநிலை மேலாளர் கிருஷ்ணகுமாரி, அதிகாரிகள்  ஆகியோர் கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சியில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் கணினிமயம் தொடர்பான மென்பொருள்கள், அதன் பணிகள் தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து மாநகராட்சி பொறியாளர்கள்,  ஒப்பந்தாரர்கள், நிதி துறை தொடர்பான வசதிகளை பயன்படுத்துவர்கள் ஆகியோரின் கருத்துகளை கேட்டு மென்பொருள்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.குறிப்பாக சொத்துவரி மற்றும் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான பணிகளை மேம்படுத்துவது தொடர்பாக பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை ஆராய்ந்து அவற்றின் மூலம் சென்னை மாநகராட்சியின் இணையதள வசதியை மேம்படுத்த  வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதைத்தவிர்த்து தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவனம் உருவாக்கியுள்ள விதிகளுக்கு உட்பட்டு இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.மேலும் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தபட்ட மழைநீர் வடிகால் தொடர்பான விவரங்களை கணினிமயம் ஆக்கி அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும் இந்த மென்பொருள்கள் தொடர்பாக இ-  புத்தகத்தை உருவாக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.Tags : corporation work ,public ,Chennai ,Chennai Corporation , Easily handled ,upgrade software,Chennai Corporation
× RELATED அரசியல் கட்சி தொடங்குவது குறித்து...