சென்னை: தமிழக பாஜவின் மாநில நிர்வாகிகள், கட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அமைந்தகரையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் மாநில துணை தலைவர் எம்.ஆர்.காந்தி தலைமை தாங்கினார். மூத்த தலைவர் இல.கணேசன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில தேர்தல் பொறுப்பாளர்கள் ராமலிங்கம், திருமலைச்சாமி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் கலந்து கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: நடிகர் ரஜினிகாந்த் பாஜவில் இணைவார் என்று ஒருபோதும் நாங்கள் கூறியது இல்லை. அதற்கான முயற்சியில் எந்தவொரு நபரும் ஈடுபடவில்லை. உள்ளாட்சி தேர்தல்தான் எங்கள் இலக்கு. அதற்கான வேலையில் நாங்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம். திருவள்ளுவர் விஷயத்தை பாஜ உலகளாவிய தத்துவத்தின் அடிப்படையில் அணுகுகிறது என்றார்.