×

இம்ரான் அழைப்பை தொடர்ந்து கர்தார்பூர் செல்ல சித்துவுக்கு மத்திய அரசு அனுமதி

புதுடெல்லி: கர்தார்பூர் குருத்வாரா விழாவில் பங்கேற்க, முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் முன்னாள் அமைச்சருமான சித்துவுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. சீக்கியர்களின் மதகுரு குருநானக் தேவின்  550வது பிறந்ததினத்தை முன்னிட்டு இந்தியாவின் பஞ்சாப் பகுதியில் உள்ள தேரா பாபா நானக் சாஹிப் குருத்வாராவிலிருந்து, பாகிஸ்தானின் கர்தார்பூர் பகுதியில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாராவுக்கு புதிய பாதை அமைக்கப்பட்டுள்ளது.  குருநானக்கின் பிறந்த நாளையொட்டி சீக்கியர்கள் நாளை அங்கு புனிதப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் 4.7 கி.மீ தூரத்துக்கு இதற்கான ஏற்பாடுகளை இந்திய மற்றும் பஞ்சாப் அரசுகள் செய்துள்ளன. இந்த  விழாவில் பங்கேற்க சித்துவுக்கு இம்ரான்கான் அழைப்பு விடுத்திருந்தார். அவர் எம்எல்ஏ என்பதால், இவ்விழாவில் கலந்து கொள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் சித்து அனுமதி கேட்டிருந்தார். அதற்கு தற்போது அனுமதி  வழங்கப்பட்டுள்ளது.

Tags : Sidhu ,Imran ,Gardarpur ,Kardarpur , Imran, Kardarpur, Sidhu, Central Government
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு