×

ராபர்ட் பயாசின் பரோல் கோரிக்கை பரிசீலனையில் உள்ளது : உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ராபர்ட் பயாஸின், பரோல் விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதாக சிறைத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரில் ஒருவரான ராபர்ட் பயாஸ், தன் மகன்  தமிழ்கோவின் திருமண ஏற்பாடுகள் செய்ய 30 நாட்கள் பரோல் வழங்க கோரி ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் அமர்வு, சிறைத்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், ஆஜராகி,  பரோல் கோரிய விண்ணப்பத்தில் தங்கும் முகவரியை தெரிவிக்காததால் அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை. தற்போது முகவரி குறிப்பிட்டு ராபர்ட் பயாஸ் அளித்துள்ள புதிய பரோல் விண்ணப்பம் சிறைத்துறையின் பரிசீலனையில் இருப்பதாக   தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை 2 வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

Tags : High Court ,Robert Bias , Robert Bias's parole, under consideration,High Court
× RELATED புழல் மத்திய சிறையில் செயல்படும்...