×

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், கடந்த 27 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், தந்தை குயில்தாசனின் உடல்நலம் குறித்து கவனிக்க தனக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கோரி  பேரறிவாளன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து, தந்தை குயில்தாசனின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி பேரறிவாளினின் சொந்த ஊர் உள்ள திருப்பத்தூர் தாசில்தாருக்கு பரோல் தொடர்பான உத்தரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் அனுமதி அளித்தவுடன் பேரறிவாளன் சிறையிலிருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் முதல் புழல் சிறையில் அடைக்கப்பட்டுவரும் பேரறிவாளனுக்கு தண்டனை காலகட்டத்தில் வழங்கப்படும் இரண்டாவது பரோல் ஆகும். இதற்கிடையே, கடந்த 2017ம் ஆண்டு தந்தை மற்றும் சகோதரி உடல்நலம் சரியில்லாத  காரணத்தால், அதைக் கணக்கில்கொண்டு அவருக்கு இரண்டு மாத பரோல்  வழங்கப்பட்டது. தற்போது தனது ஆயுட்கால தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Rajiv Gandhi , One month parole , Rajiv Gandhi murder case
× RELATED ஷர்மிளா தற்கொலை விவகாரம்:...