×

2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் 3வதாக பிறந்த பெண் சிசுவை விஷம் கொடுத்து கொன்ற பாட்டி : தண்டராம்பட்டு அருகே கொடூரம்

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு அருகே மகனுக்கு மூன்றாவதும் பெண் குழந்தையாக பிறந்ததால், விஷம் வைத்து கொன்ற பாட்டியை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த ராயண்டபுரம் கிராமம் டேங்க் தெருவை சேர்ந்தவர் நடராஜ். இவரது மனைவி குப்பு(55). இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் நாகராஜ், கூலித்தொழிலாளி. அவரது மனைவி ராணி. இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி ராணிக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்த குழந்தை 7வது நாளில் திடீரென இறந்தது. தகவலறிந்த தண்டராம்பட்டு போலீசார் குழந்தை சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில், குழந்தைக்கு விஷம் கொடுத்ததால் இறந்தது தெரியவந்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பாரதி தீவிர விசாரணை நடத்தினார். அதில், குழந்தையின் பாட்டி குப்பு தனது மகனுக்கு மூன்றாவதும் பெண் குழந்தையாக பிறந்ததால் விஷம் வைத்து கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த போலீசார், குப்புவை கைது செய்துதனர். 3வதும் பெண்ணாக பிறந்ததால் பாட்டியே விஷம் வைத்து கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : infant ,baby , Grandmother poisoned,2-year-old baby
× RELATED மூதாட்டியிடம் நகை பறிப்பு