×

சீன ஓபன் பேட்மின்டன் சாய்னா வெளியேற்றம் : 2வது சுற்றில் காஷ்யப்

புஸோ: சீன ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால்  முதல் சுற்றிலேயே வெளியேறினார். முதல் சுற்றில் சீன வீராங்கனை கெய் யான் யானுடன் நேற்று மோதிய சாய்னா (9வது ரேங்க்) 9-21, 12-21 என்ற நேர் செட்களில் தோல்வியைத் தழுவி ஏமாற்றத்துடன் வெளியேறினார். இப்போட்டி வெறும் 24 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே உலக சாம்பியன் பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே வெளியேறிய நிலையில், சாய்னாவும் தோல்வியைத் தழுவியதால் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பதக்க நம்பிக்கை முற்றிலுமாகத் தகர்ந்தது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நேற்று களமிறங்கிய இந்திய வீரர் பாருபள்ளி காஷ்யப் 21-14, 21-3 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் சித்திகோம் தமாசினை எளிதாக வீழ்த்தினார். இப்போட்டி 43 நிமிடத்தில் முடிந்தது. காஷ்யப் 2வது சுற்றில் டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென்னுடன் மோதுகிறார். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரணவ் ஜெர்ரி சோப்ரா - சிக்கி ரெட்டி முதல் சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றமளித்தனர்.

Tags : exit ,Saina ,Open ,Chinese ,round ,Kashyap , Chinese Open badminton, Saina exit, Kashyap in 2nd round
× RELATED பெங்களூரு ஓபன் சுமித் நாகல் ஏமாற்றம்