×

நீலகிரி மாவட்டத்தில் பொது இடத்தில் மதுபாட்டில் வீசினால் இனி 10 ஆயிரம் அபராதம்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களை பொது இடங்கள்,  சாைலயோரங்களில் தூக்கி எறிந்தால் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என  மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக்  கடைகளில் மது வாங்கும் குடிமகன்கள்,   காலி மதுபாட்டில்களை சாலையோரங்கள், கால்வாய்கள், விவசாய நிலங்கள் போன்றவற்றில் வீசி எறித்து சென்று விடுகின்றனர். குறிப்பாக மசினகுடி,  கூடலூர் சுற்று வட்டார பகுதிகள், கெத்தை மலைப்பாதை உள்ளிட்ட  வனப்பகுதிகளுக்குள் அத்துமீறி சென்று மது அருந்துபவர்கள் காலி  பாட்டில்களை வனப்பகுதிக்குள்ளேயே வீசி விடுகின்றனர். மேலும், சில  சமயங்களில் பாறைகளில் வீசி உடைத்து விடுகின்றனர். இதனால் யானை,  காட்டுமாடு, புலி உள்ளிட்டவைகள் காயமடைந்து இறக்கக்கூடிய சூழலும் உள்ளது.

இதனை  கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி மது  பாட்டில்களை சாலையோரங்கள், பொது இடங்களில் வீசுபவர்களுக்கு 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், நீலகிரி  மாவட்டத்தில் 55 மதுபான சில்லரை விற்பனை கடைகளில் இடவசதி உள்ள 32  கடைகளில் மது அருந்தும்  கூடத்திற்கு கடந்த அக்டோபர் 1ம் ேததி முதல் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மது குடித்துவிட்டு காலி  பாட்டில்களை குப்பை தொட்டிகளில் போடாமல் பொது இடத்திலோ, பொதுமக்கள் கூடும்  இடங்களிலோ, சாலையோரங்களிலோ தூக்கி எறிவது கண்டறியப்பட்டால் உள்ளாட்சி  விதிகளின்படி 10 ஆயிரம் அபராதம்  விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Tags : district ,place ,Nilgiris ,district Thousands , Nilgiris ,district,throwing ,alcohol,public
× RELATED கோடை சீசன் எதிரொலி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்