×

பெரியமாங்கோடு கிராமத்தில் ரூ.4.50 கோடியில் மீன்பிடி இறங்குதளம்

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா, பெரிய மாங்கோடு மீனவ கிராமத்தில் சுமார் 500 மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர். இயந்திரம்  பொருத்தப்பட்ட 300 நாட்டுப் படகுகள் உள்ளன. இவை சிரமமின்றி கடலுக்கு சென்று வரவும், படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும், மீன்களை  சுகாதார முறையில் உலரவைத்து கையாளவும், தங்களது வலைகளை பின்னி பயனடையவும் தமிழக வருவாய் துறை சார்பில் ரூ.4.50 கோடி நிதியில்,  இங்கு சமீபத்தில் புதிய மீன்பிடி இறங்குதளம் கட்டப்பட்டது.

இந்த இறங்குதளத்தில் படகு அணையும் தளம், கால்வாய்,   மீன் ஏலக்கூடம், வலை பின்னும் கூடம், மீன் உலர்தளம் ஆகியவை அமைக்கப்பட்டு  உள்ளது. மேலும், இதன் மூலம் மீன்பிடி தொழில் மற்றும் அதை சார்ந்த பிற தொழில்கள் முன்னேற்றம் அடைய வழிவகை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மீன்பிடி இறங்குதளத்தை நேற்று பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். மாவட்ட  மீன்வளத்துறை உதவி இயக்குனர் பஞ்சராஜா, உதவி செயற்பொறியாளர் ஞானம், மாவட்ட மீனவரணி செயலாளர் மாங்கோடு மோகன் ஆகியோர்  இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இதில் மீஞ்சூர் ஒன்றிய கழக செயலாளர் மோகன வடிவேல், மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பானுபிரசாத், மாவட்ட மீனவரணி இணை  செயலாளர் சந்திரசேகர், மீன்வள ஆய்வாளர் விஜயலட்சுமி, மேற்பார்வையாளர் செல்வராஜ், நிர்வாகிகள் ஆறுமுகம், திருமலை, ஆமூர் தனசேகரன்,  வெற்றிவேல், ராமலிங்கம், தேவம்பட்டு உதயகுமார், தத்தை அருளானந்தம், வேம்பாக்கம் வெங்கடேசன், பொன்னேரி நாகராஜ், சம்பத், சவுகத் அலி,  பொன்னேரி துர்கா பிரசாத், அண்ணாமலைச்சேரி தேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Periyamangode village ,land , 4.50 crores fishing land at Periyamangode village
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!