×

மாதவரம் ஜிஎஸ்டி சாலையில் பைக் மீது லாரி மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாப பலி: டிரைவருக்கு வலை

திருவொற்றியூர்: மாதவரத்தில் பைக் மீது லாரி மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.  ஆந்திர மாநிலம், சத்தியவேடு, பொம்மாஞ்சி குண்டா கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா (26). அதே பகுதியை சேர்ந்தவர் வேலு (24).  இருவரும், அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள், சென்னை ஸ்டான்லி அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தங்களது உறவினரை பார்ப்பதற்கு நேற்று முன்தினம் பைக்கில் வந்தனர்.   மருத்துவமனையில் உறவினரை பார்த்துவிட்டு நேற்று காலை மீண்டும் ஆந்திராவிற்கு பைக்கில் புறப்பட்டனர்.  மாதவரம் ஜிஎஸ்டி சாலையில் பொன்னியம்மன்மேடு அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி இவர்கள் மீது  மோதியது.

இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது, லாரி இவர்கள் மீது ஏறியதில்  அதே இடத்தில் இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதை பார்த்த லாரி டிரைவர் வண்டியை நிறுத்தா மல் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய லாரி டிரைவரை  வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.Tags : teenagers ,GST road , GST road,truck ,Plaintiffs,Pity
× RELATED நடிகைக்கு கத்திக்குத்து: வாலிபருக்கு போலீஸ் வலை