×

உரிய நேரத்தில் வராததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் ரியல் எஸ்டேட் அதிபருக்கு தர்ம அடி: உணவு டெலிவரி ஊழியர்கள் கைது

சென்னை: ஆர்டர் செய்த உணவை காலதாமதமாக கொண்டு வந்ததை தட்டிக்கேட்ட ரியல் எஸ்டேட் அதிபரை, 4 ஆன்லைன் நிறுவன ஊழியர்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர்.சென்னை அசோக் நகர் 7வது அவென்யூவை சேர்ந்தவர் பாலாஜி (45), ரியல் எஸ்ேடட் அதிபரான இவர், ேநற்று முன்தினம் இரவு தனது வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆன்லைன் நிறுவன ஊழியர் சாலிகிராமத்தை ேசர்ந்த ராஜேஷ்கண்ணா (27) என்பவர் அந்த ஆர்டரை எடுத்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரது தந்தை தனசேகர் (52) என்பவரும் உடன் வந்துள்ளார். பிறகு பாலாஜி வீட்டின் அருகே நின்று கொண்டு செல்போனில் உணவை வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளனர். அப்போது பாலாஜி உணவை வீட்டிற்கு வந்து கொடுக்கும்படி கூறியுள்ளார். அதற்கு ராஜேஷ்கண்ணாவின் தந்தை தனசேகர் சாப்பாட்டை கூட வெளியே வந்து வாங்க முடியாதா என்று கேட்டுள்ளார். இதனால் பாலாஜிக்கும் தனசேருக்கும் செல்போனிலேயே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி வீட்டில் இருந்து கீழே வந்த பாலாஜி தனசேகர் மற்றும் ராஜேஷ்கண்ணாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தனசேகரை பாலாஜி தரப்பை சேர்ந்த நபர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது உடன் இருந்த ராஜேஷ்கண்ணா போதையில் இருந்த பாலாஜியை கடுமையாக தாக்கி உள்ளார். இதனால் இரு தரப்பினரும் கடுமையாக மோதி கொண்டனர். மேலும், அந்த வழியாக ஆன்லைன் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களான மதிவண்ணன், ஜெயசூர்யா ஆகியோர் வந்துள்ளனர். தனது நிறுவன ஊழியரை தாக்குவதை கண்டு அவர்களும் பாலாஜியை தாக்கி உள்ளனர். இதில் பாலாஜி படுகாயமடைந்தார். அதைதொடர்ந்து பாலாஜி சம்பவம் குறித்து அசோக் நகர் காவல் நிலையத்தில் உணவு காலதாமதமாக கொண்டு வந்ததை தட்டிக்கேட்டதால் தன்னை தாக்கி 10 சவரன் செயினை பறித்து சென்றதாக புகார் அளித்தார். அதன்படி போலீசார் பாலாஜியை தாக்கிய தனசேகர், அவரது மகன் ராஜேஷ்கண்ணா, மதிவண்ணன், ஜெயசூர்யா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் தனசேகர் தரப்பில் தன்னை தாக்கியதாக பாலாஜி மீது அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் பாலாஜியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.Tags : Real estate tycoon , finding , DELHI,Real estate ,arrested
× RELATED பப்ஜிதடை எதிரொலி: விளையாட முடியாத...