×

எந்தமொழியை தமிழர்கள் மீது திணித்தாலும் எதிர்ப்போம்: கனிமொழி பேட்டி

சென்னை: எந்த மொழியை தமிழர்கள் மீது திணித்தாலும் எதிர்ப்போம் என்றார் கனிமொழி எம்பி. சென்னை விமான நிலையத்தில் திமுக எம்பி கனிமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு விருது அறிவித்ததற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசு தொடர்ந்து தமிழ் வளர்ச்சியில்  அக்கறை செலுத்துவதுபோல் செயல்படுகிறது. முதலில் மத்திய அரசு இந்தியை திணிப்பதை நிறுத்தினால் தமிழுக்கு மட்டுமல்ல அனைத்து மொழிகளுக்குமே அவர்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய நன்மையாக இருக்கும். மத்திய அரசு எல்லா  மொழிகளுக்கும் ஒரு முக்கியத்துவம் தரவேண்டும். தமிழுக்கு மற்ற மொழிகளுக்கு தரும் முக்கியத்துவம் தருவதுபோல் தமிழுக்கும் தருவது வரவேற்கக்கூடியது.

ஒரு மொழியை கற்றுக்கொள்ளக்கூடாது என்ற நிலைப்பாட்டை எப்போதும் எடுத்ததில்லை. எந்த ஒரு மொழியையும் தமிழர்கள் மீது திணிப்பதை தான் நாங்கள் எதிர்க்கிறோம். தமிழர்கள் மீது மட்டுமல்ல எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களாக  இருந்தாலும் அவர்கள் மீது ஒரு குறிப்பிட்ட மொழியை திணிப்பது மிகப்பெரிய கலாச்சார ஆக்கிரமிப்பாகும் இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Tamils ,protest , Tamils protest ,proposal , Tamils
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!